புதன், 2 ஜூன், 2010

கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' எழுதும் ஒன்றாம் வகுப்பு மாணவி

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி கம்ப்யூட்டரில் சி புரோகிராம் மூலம் கணக்குகள் போட்டு அசத்துகிறார். சி புரோகிராம் என்பது ஓரளவு கம்ப்யூட்டர் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே செய்வது. தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு 10ம் வகுப்பில் இருந்து இந்த பாடம் நடத்துகின்றனர். கம்ப்யூட்டரை இயக்க தெரிந்து, அடிப்படைகள் தெரிந்த பிறகு "சி புரோகிராம்' பற்றி கம்ப்யூட்டர் கற்று தரும் நிறுவனங்கள் சொல்லித் தருகின்றன. ஆனால், மேலூர் மில்கேட்டை சேர்ந்த சிவகுமார், மலர்விழி தம்பதியின் மகள் சுவேதா(6) இந்த "புரோகிராமில்' அசத்துகிறார். ஆட்டுக்குளம் மகாத்மா காந்தி வித்யாஸ்ரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் இவர், பல்வேறு வகை கணக்குகளுக்கு கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' மூலம் தீர்வு காண்கிறார். தீர்வு காணும் விதம் குறித்த எந்த கேள்வி கேட்டாலும் விளக்கி கூறுகிறார்.

1 கருத்து: