வெள்ளி, 20 ஜூலை, 2012

தென்பாண்டி சீம ஓரமா என் மாமேன் வீட்டு தோட்டம் தை மாசம் மாலை நேரமா பூ வாசம் ஆழ தூக்கும்


தென்பாண்டி  சீம  ஓரமா
என்  மாமேன்  வீட்டு  தோட்டம்
தை  மாசம்  மாலை  நேரமா
பூ  வாசம்  ஆழ  தூக்கும்


பெண் :மஞ்ச  குளிக்கையிலே
ரொம்ப  இடங்களிலே
காயத்த  நான்   பாத்தேன்
ஆண் :“எங்கே  காமி ”
பெண் :“உம் ..கை  எடு”
ஆண் :உன்  உடம்பில  தான்
நான்  புகுந்து  கிட்டேன்
உன்  உசுருல  தான்
நான்  சேந்துக்கிட்டேன்
பெண் :பேசி  மயக்குற  ஆசாமி
உன்னே  பாத்தே  நடுங்குரேன்
போ  சாமி
ஆண் :என்   நரம்புகள்  துடிக்குது
வா  மாமி

ஆண் :மானே  மரிக்கொழுந்தே
தேனே  தினைக்கருதே
தாவணி  ஏன்  உனக்கு
பெண் :நீ   ரசிக்கிறத
நான்  பாத்துப்புட்டேன்
ஆண் :ஹ்ம்ம்  ஹ்ம்ம் ..
பெண் :உன்  பசி  அறிஞ்சி
நான்  பொத்திக்கிட்டேன்
ஆண் :பாட  படுத்தற
நீ  நீ  நீ
பட்டு  பாய  விரிக்கரேன்
வா  வா  நீ
பெண் :உன்  வசதிக்கு  இருக்கிறேன்
வெளையாடு 

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
நான் மகான் அல்ல படத்துல பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கு..அதும் அந்த கண்ணோரம் காதல் வந்தால் பாட்டு கேக்கும் போது அது என்னனு தெரியல அப்படி ஒரு Feelings ..பாட்ட நம்ம யுவன் படிச்சு இருக்கார் சூப்பரா இருக்கு..நீங்களும் கேட்டு பாருங்க அப்பறம் தெரியும்...


இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போல தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைத்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே
அடங்காதே ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு
சென்றதே
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் - ஒஹ்ஹ …
கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடர்ருதே தொடருதே நாடகம் ..
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம் ..
நேரங்கள் தீருதே வேகங்கள்
கூடுதே
பூவே உண் கண்ணுக்குள்ளே பூமி
பந்து சுத்துதே ..
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்ப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லர்மே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் -ஒஹ்ஹ்ஹ ..
ஹே , என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நானில்லை -
ஒஹ்ஹ ..
என்மீதிலே உன் வாசனை
எப்போதும் வீச பார்க்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழவில்லை -
ஒஹ்ஹ
நீ என்னை காண்பதே வானவில்
போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூறல்
நெஞ்சில் சிந்துதே ..
ஒஹ்ஹ …
ஒஹ்ஹ …
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் - ஒஹ்ஹ …

வெள்ளி, 16 ஜூலை, 2010

பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர் தியரி ஹென்றி ஓய்வு
பிரான்ஸ் கால்பந்து அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், நட்சத்திர வீரர் தியரி ஹென்றி.

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் தியரி ஹென்றி. கடந்த 1998 ம் ஆண்டு உலககோப்பை மற்றும் 2000 ல் நடந்த யூரோ கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றவர். இதுவரை 123 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 51 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். கடந்த 2006 ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலககோப்பை தொடரின் பைனலுக்கு, பிரான்ஸ் அணி முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலககோப்பை தொடரின், லீக் சுற்றிலேயே வெளியேறி சொதப்பியது பிரான்ஸ் அணி. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார் ஹென்றி.

ஓய்வு: இந்நிலையில் பிரான்ஸ் அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஹென்றி. இது குறித்து அவர் கூறுகையில்,"" அணியில் நீடிக்க வேண்டும் எனில், 100 சதவீதம் உடற்தகுதி வேண்டும். இதனால் பல முறை ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு இதுவே சரியான தருணம் என கருதுகிறேன்,'' என்றார். பிரான்ஸ் அணியிலிருந்து ஓய்வு பெற்ற ஹென்றி, நியூயார்க் ரெட் புல்ஸ் அணி சார்பில் கிளப் போட்டிகளில் விளையாட உள்ளார்.

திங்கள், 12 ஜூலை, 2010

சிறந்த வீரர் ஃபோர்லான்; தங்க ஷூ முல்லெருக்கு
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த கால்பந்து வீரராக உருகுவேயின் டீகோ ஃபோர்லானும், அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற மகுடத்திற்கு ஜெர்மனி வீரர் முல்லரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தப் போட்டியி்ல் ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர், உருகுவேயின் ஃபோர்லன் ஆகியோர் 5 கோல் அடித்திருந்தனர்.

உருகுவே - ஜெர்மனி இடையிலான ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக முல்லரும் இவர்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் கோல் அடிக்கத் தவறிவிட்டனர். இதனால், மேற்கூறிய 4 பேருமே 5 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர்.

இதனால், அதிக கோலடிக்க உதவியவர் யார் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி, தனது அணி வீரர்கள் 3 கோல் அடிப்பதற்கு முல்லர் உதவியிருந்தார். மற்றவர்கள் தலா ஒருமுறை மட்டுமே பிறர் கோலடிக்க உதவியிருந்தனர். இதையடுத்து கோல்டன் ஷூ விருது முல்லருக்குக் கிடைத்தது.

இது தவிர, போட்டியின் சிறந்த இளம் வீரர் விருதும் முல்லருக்குக் கிடைத்திருக்கிறது

2006-ம் ஆண்டு போட்டியில் ஜெர்மனியின் குளோஸுக்கு கோல்டன் ஷு விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 30 ஜூன், 2010

நெ‌ல்லை, பா‌ண்டிய‌ன் விரைவு இரயில்க‌ளி‌ன் நேரம் மாற்றம்
செ‌ன்னை எழு‌ம்பூ‌‌ரி‌ல் இரு‌ந்து புற‌ப்படு‌ம் நெல்லை, பா‌ண்டிய‌ன் விரைவு இர‌யி‌ல்க‌ளி‌ன் நேரமு‌ம், செ‌ன்‌ட்ர‌லி‌ல்‌ இரு‌ந்து புற‌ப்படு‌ம் மும்பை ‌விரைவு இர‌யி‌‌லி‌ன் நேர‌மு‌ம் ம‌ா‌ற்‌றி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் ‌விரைவு இர‌யி‌‌‌ல் காலை 11.45 மணிக்கு பதிலாக இனி காலை 11.55 மணிக்கு புறப்ப‌ட்டு‌ச் செ‌ல்லு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் இரயில் மதியம் 2 மணிக்கு பதிலாக 2.45 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் பாட்னாவில் இருந்து பெங்களூர் செல்லும் இரயில் சென்ட்ரலில் இருந்து 3.30 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பெங்களூரில் இருந்து தர்பங்கா செல்லும் இரயில் சென்ட்ரலில் இருந்து 3.30 மணிக்கு பதிலாக 4.15 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எழும்பூரில் இருந்து புறப்படும் செங்கோட்டை பொதிகை ‌விரைவு இர‌யி‌ல் இரவு 8.50 மணிக்கு பதிலாக இனி 8.05 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் இரவு 9.15 மணிக்கு பதி‌க்கு புற‌ப்படு‌ம் நெ‌ல்லை ‌விரைவு இர‌யி‌ல் இரவு 8.50 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இரவு 9.45 மணிக்கு புற‌ப்படு‌ம் மதுரை பாண்டியன் ‌விரைவு இர‌யி‌ல் இரவு 9.15 மணிக்கு புறப்ப‌ட்டு செ‌ல்லு‌ம் எ‌ன்று‌ம் எழும்பூர்-ராமேசுவரம் இரயில் 7.55 மணிக்கு பதிலாக 9.40 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌‌வி‌‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எழும்பூரில் இருந்து பகல் 1.05 மணிக்கு புற‌ப்படு‌ம் ராமேசுவரம்-வாரணாசி இரயில் 1.10 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ தெ‌ற்கு இர‌யி‌ல்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

திங்கள், 21 ஜூன், 2010

முத்த காட்சியில் நடித்துவிட்டு கதறி அழுத நடிகை

பொள்ளாச்சி அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஆறாவது வனம் என்ற படம் தயாராகி வருகிறது. படத்தின் கதைப்படி, ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வசித்து வருகிறார். அந்த கிராமம் அப்படி வெறிச்சோடி கிடப்பதற்கு காரணம் என்ன? என்பதே இந்த படத்தின் கரு. இதில் புதுமுகங்கள் பூஷண் -வித்யா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர் புவனேஷ் இயக்குகிறார். எஸ்.எம்.தியாகராஜன் தயாரிக்கிறார்.

கதைப்படி, நாயகனும், நாயகியும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும், 2 சாதியை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க துடிக்கிறார்கள். கதாநாயகன் பூஷண், கதாநாயகியின் தாய்மாமனை வெட்டி சாய்ப்பதற்கு அரிவாளுடன் பாய்ந்து வருகிறான். அதைப்பார்த்த கதாநாயகி வித்யா, தாய் மாமனையும் காப்பாற்ற வேண்டும்....காதலனையும் கொலைப்பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்... அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறார். கதாநாயகனின் மனதை மாற்றுகிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். உடனே, அரிவாளுடன் பாய்ந்து வரும் கதாநாயகன் பூஷணை கட்டிப்பிடித்து, உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கிறார்.

இந்த காட்சியை படமாக்க இயக்குனர் புவனேஷ் திட்டமிட்டார். முத்தம் கொடுப்பது பற்றி நாயகியிடர், டைரக்டர் விளக்கினார். முதலில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கத் தயங்கிய அறிமுக நாயகி வித்யா, பின்னர் ஒப்புக் கொண்டார். பொள்ளாச்சி அருகில் உள்ள மலைப்பகுதியில் பொதுமக்கள் 2 ஆயிரம் பேர்களுக்கு மத்தியில், அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டது. நடித்து முடித்ததும், வித்யா முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதார். அழுதபடியே அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு போய் விட்டார். அங்கு போனபிறகும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. டைரக்டர் புவனேஷ் ஓட்டலுக்கு சென்று வித்யாவை சமாதானப்படுத்தி, படமாக்கப்பட்ட காட்சியை `மானிட்டரில்' திரையிட்டு காண்பித்தார். விரசம் இல்லாமல் அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டு இருந்ததால், வித்யா சமாதானம் ஆனார். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி மலைப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

புதன், 16 ஜூன், 2010

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி
ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டுசென்றுள்ளார். மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

ராமநாதபுரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .

இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற் றோரிடம் வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பள்ளியில் நடந்த சம்பவம் உண்மைதான். எனக்கு தாமதமாகத் தான் தெரியவந்தது. மாணவியின் விருப்பமின்றி டி.சி.,யை கொடுக்க கூடாது. மாணவியின் நலன் கருதி அவருக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்