வியாழன், 6 மே, 2010

மும்பை தாக்குதல் வழக்கில் கஸாப்புக்கு தூக்கு: நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அஜ்மல் கஸாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மு‌ம்பை தா‌க்குத‌ல் வழ‌க்‌கி‌ல் கு‌ற்றவா‌ளி என அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌தி அ‌ஜ்ம‌ல் கஸா‌ப்பு‌க்கான த‌‌ண்டனை ‌விவர‌ம் இ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்படு‌கி‌ன்றது.

166 ப‌ே‌ர்களை ப‌லிவா‌ங்‌கிய மு‌ம்பை தா‌‌க்குத‌‌ல் வழ‌க்‌கி‌ல் ‌உ‌யிருட‌ன் ‌பிடி‌ப‌ட்ட ஒரே ‌தீ‌விரவா‌தி அ‌ஜ்ம‌ல் கஸா‌ப்பை கு‌ற்றவா‌ளி எ‌ன்று மு‌ம்பை ‌சிற‌ப்பு ‌நீ‌தி‌ம‌ன்ற‌ம் கட‌ந்த 4 ஆ‌ம் தே‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

நா‌ட்டி‌ன் ‌மீது போ‌ர் தொடு‌த்தது உ‌ள்‌ளி‌ட்ட 86 வழ‌க்‌குக‌ளி‌ல் கஸா‌ப் கு‌ற்றவா‌ளி எ‌ன்று ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றி‌வி‌த்தது.

72 பேரை கொடூரமாக கொ‌ன்ற கஸா‌ப்‌பி‌ற்கு தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அரசு தர‌ப்பு வழ‌க்‌க‌றிஞ‌ர் உஜ்வால் நிக்காமும், ப‌லியானவ‌ர்க‌ளி‌‌ன் உற‌வின‌ர்களு‌ம் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

கஸா‌ப் ‌மீதான த‌ண்டனை ‌விவர‌ம் மே 6 ஆ‌ம் தே‌தி வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் எ‌ன்று மு‌ம்பை ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌தி எம்.எல். தஹலியானி ஏ‌ற்கனவே ‌அ‌றிவ‌ி‌த்‌திரு‌ந்தா‌‌ர்.

அத‌ன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.எல். தஹலியானி, குற்றவாளி கஸாப்புக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.கஸாப்பை சாகும் வரை தூக்கிலிடுமாறு அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கஸாப் மீதான 86 குற்றச்சாற்றுக்களும் நிரூபணமாகி உள்ளதாக தனது தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி, 4 குற்றச்சாற்றுக்களின் அடிப்படையில் மரணத்தண்டனை விதிப்பதாகவும், 5 குற்றசாற்றுக்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதிப்பதாகவும் கூறினார்.

"கஸாப் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.இதுபோன்ற ஒரு தீவிரவாதியை உயிருடன் விட்டு வைத்திருப்பது சமூகத்திற்கும், இந்திய அரசுக்கும் ஆபத்தாக அமைந்துவிடும்" என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

கந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தை நினைவு கூர்ந்த நீதிபதி, கஸாப் உயிருடன் இருந்தால் அதுபோன்றதொரு சூழ்நிலை மீண்டும் ஏற்படும் என்றார்.

கஸாப் தாமாகவே முன்வந்து லஷ்கர் இயக்கத்தில் சேர்ந்து தன்னை முஜாகிதீனாக (புனித போராளியாக) அறிவித்துக் கொண்டவன்" என்றும் கூறிய நீதிபதி தஹலியானி, கஸாப் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக மூளை சலவை செய்யப்பட்டவன் என்று அவனது சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கே.பி. பவாரின் வாதத்தை நிராகரித்ததோடு, லஷ்கர் இயக்கத்தை தோற்றுவித்த ஹஃபிஷ் சயீத்தின் உத்தரவின் பேரிலேயே கஸாப் செயல்பட்டதாக கூறினார்.

நீதிபதி தஹலியானி தீர்ப்பை படித்துக் கொண்டிருந்தபோது, கஸாப் விசும்பி அழுதான்.ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறும் அவன் கேட்டான்.

தீர்ப்பை படித்து முடித்ததும்,அதனை இந்தியில் கஸாப்பிடம் விளக்கிய நீதிபதி தஹலியானி, அவன் ஏதாவது சொல்ல விரும்புகின்றானா எனக் கேட்டார். ஆனால் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்பதுபோல் தலையை அசைத்து கஸாப் மறுத்தான்.

இதனையடுத்து கஸாப்,பலத்த பாதுகாப்புடன் ஆர்தர் ரோடு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டான.

"டுவிட்டர்' சாதனைக்கு சச்சின் "ரெடி'

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது "டுவிட்டர்' இன்னிங்சை துவக்கியுள்ளார். முதல் நாளில், இவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளது. மிக விரைவில் ஹாலிவுட் நடிகர் அஷ்டான் கச்சரின் 10 லட்சம் "டுவிட்டர்' ஆதரவாளர்கள் சாதனையை தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"டுவிட்டர்' இணையதளம் மூலம் சிறிய தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இதனை, சுருக்கமாக "இன்டர்நெட் எஸ்.எம்.எஸ்' என குறிப்பிடலாம். இதில் புகழ்பெற்றவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தங்களது ஆதரவாளர்களுக்கு இடையே தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வர். இதில் நேற்று சச்சினும் உறுப்பினராக சேர்ந்தார். இவரை பின்பற்றும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 70 ஆயிரத்தை தொட்டுள்ளது. "டுவீட்டர்' இணையதளத்தில் ஹாலிவுட் நடிகர் அஷ்டான் கச்சருக்கு தான் அதிகபட்சமாக 10 லட்சம் ஆதரவாளர்களாக உள்ளனர். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் எடுத்து சாதித்துள்ள சச்சின், மிக விரைவில் அஷ்டான் சாதனையை முறியடிப்பார். "டுவிட்டர்' தளத்தில் சச்சினை பற்றி அறிய http://twitter.com/sachin_rt என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

வீரர்களுக்கு வாழ்த்து: "டுவீட்டரில்' இணைந்துள்ள சச்சின், "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சக இந்திய வீரர்கள் சாதிக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல, ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ள சேவக்கிற்கும் வாழ்த்து கூறியுள்ளார். தவிர, தனது அரிய "போட்டோ'க்களையும் வெளியிட்டுள்ளார்.

"கிரிக்கெட் கடவுள்': ஏற்கனவே "டுவீட்டரில்' உறுப்பினராக உள்ள டென்னிஸ் நட்சத்திரம் சானியா மற்றும் பாலிவுட் பிரபலங்கள் சச்சினை வரவேற்றுள்ளனர்.
ஷில்பா ஷெட்டி: "டுவிட்டர்' தளத்தில் "கிரிக்கெட் கடவுள்' சச்சின் இடம் பெற்றுள்ளார். இதனை அனைவரிடமும் சொல்லுங்கள். அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கிறேன்.
சானியா: "டுவிட்டர்' மூலம் உங்களை சந்திப்பது மிகவும் நல்ல விஷயம்.
ரித்தேஷ் தேஷ்முக்(நடிகர்): அஷ்டான் கச்சார் சாதனையை சச்சின் முறியடிக்க விரும்புகிறோம். அவரை பின்பற்றுங்கள்.
கரன் ஜோகர்(இயக்குனர்): உரத்த குரலில் சச்சினை வரவேற்கிறேன். "டுவீட்டர்' தளம் மூலம் உற்சாகம் அடையுங்கள்.
தீபிகா படுகோனே: எனக்கு மிகவும் பிடித்த சச்சினை வரவேற்கிறேன். இவர், "டுவிட்டரில்' அதிக ஆதரவாளர்கள் பெற்று சாதிக்க வேண்டும்.
சமீரா ரெட்டி: கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அரசனை வரவேற்போம். "வீ லவ் யு' சச்சின்.

சனி, 1 மே, 2010

சச்சின் பெயரில் புது மாம்பழம்!

மாம்பழ "சீசன்' துவங்கி விட்டது. மார்க்கெட்டில் மல்கோவா, சப்போட்டா உள்ளிட்ட நிறைய வகைகளை காணலாம். இந்த ஆண்டு புதிதாக சச்சின் பெயரில் மாம்பழம் வருகிறது. இவர், விலைமதிப்பில்லாத வீரர் என்பதால், இந்த மாம்பழம் விற்பனைக்கு கிடையாதாம்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு அங்கீகாரமாக குவாலியர் மைதானத்தின் ஒரு பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா பெயர்:
இந்த வரிசையில் தனது புதுவகையான மாம்பழத்துக்கு சச்சின் பெயரை வைத்துள்ளார் உ.பி.,யை சேர்ந்த வயதான விவசாயி கலிமுல்லா கான். இவரை மலிகாபாத் பகுதியில் "மாம்பழ ராஜா' என்றே அழைக்கின்றனர். இது வரை 300 வகையான மாம்பழ வகைகளை உருவாக்கியுள்ள இவர், நாட்டின் உயர்ந்த பத்மஸ்ரீ விருது வென்றுள்ளார். இவருக்கு கிரிக்கெட் தவிர, பாலிவுட் நட்சத்திரங்களையும் பிடிக்கும். இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் ஒரு மாம்பழம் மற்றும் கொய்யாப் பழங்களை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து கலிமுல்லா கூறியது:
உலகில் சச்சினை போன்ற சிறந்த வீரர் யாரும் இல்லை. இதனால் தான் புதுவகையான மாம்பழத்துக்கு அவரது பெயரை வைத்தேன். சாசா மற்றும் அமின் வகைகளை கலந்து உருவாக்கியுள்ளேன். இது மிகவும் ருசியாக இருக்கும். கிரிக்கெட் அரங்கின் சூப்பர் "ஹீரோவான' சச்சின், விலைமதிப்பில்லாத வீரர். அவர் ஒன்றும் விற்கும் பொளுளல்ல. இதனால், அவரது பெயரிலான மாம்பழத்தை விற்பனைக்கு தரப் போவதில்லை.
அழகான ஐஸ்வர்யா பெயரில் மாம்பழம் மட்டும் போதாது. இதனால் தான் கொய்யாப்பழமும் உருவாக்கினேன். இரண்டுமே நல்ல சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். ஜூன் மாதம், மாம்பழமாக மாறியதும், மும்பைக்கு சென்று சச்சின் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு பரிசாக அளிப்பேன். இந்த வகை மாமரத்தை சச்சினுக்கு அன்பளிப்பாக வழங்கவும் உள்ளேன். என்னால் பயணம் செய்ய முடியாத பட்சத்தில், எனது மகனை அனுப்பி வைப்பேன்.
இவ்வாறு கலிமுல்லா கூறினார்.