செவ்வாய், 15 ஜூன், 2010

உலகக்கோப்பை இறுதியே கனவு - சச்சின் டெண்டுல்ல்கர்




2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதையடுத்து, குறிப்பாக இறுதிப் போட்டி தன் சொந்த ஊரான மும்பையில் நடைபெறுவதையடுத்து இறுதிப் போட்டியில் நுழைவதுதான் கனவு என்று இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

"உலகக்கோப்பையைப் பொறுத்தவரை அனைத்தும் ஒரு வளர்ச்சிப்போக்குதான், நாங்கள் உடனடியாக 50-வது ஃபுளோருக்குத் தாவ விரும்பவில்லை. முதலில் கிரவுண்ட் ஃப்ளோரிலிருந்து துவங்குவோம்.

படிப்படியாக இறுதிக்கு செல்லவேண்டும். இது ஒரு மகிழ்ச்சிதரும் பயணமாக அமையும், இதுதான் எங்க்கள் கனவு, என்னுடையது மட்டுமல்ல, இந்த நாடு முழுதுமான கனவு அந்த இறுதிப் போட்டிக்குள் நுழைவதுதான். மும்பையில் இறுதிப் போட்டியை விளையாடுவது என்பது கனவு ஆனால் அனைத்தும் ஒன்றிணைந்து அங்கு கொண்டு நம்மைச் சேர்க்கவேண்டும்.

நங்கள் எங்களது திறமைக்கேற்ப விளையாடினால், நாங்கள் இத்தனை காலமாக எதனைச் செய்யவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோமோ அது நிகழும்." என்றார் சச்சின் டெண்டுல்கர்.

அது போல் தனது ஓய்வு பற்றி குறிப்பிட்ட டெண்டுல்கர், "நான் என்னால் முடிந்த வரை விளையாடவே விரும்புகிறேன், ஆசையும், வேட்கையும் உள்ளவரை விளையாடுவேன், ஒரு நாள் படுக்கையை விட்டு எழுந்திருக்க விருப்பம் இல்லையெனில் அந்த நாள் முதல் வேறு திசையில் போக வேண்டிய நேரம் வந்து விட்டத் என்று பொருள் எனவே எனக்கு அலுக்கும் வரை நான் விளையாடுவேன்." என்றார் சச்சின் டெண்டுல்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக