
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நெல்லை, பாண்டியன் விரைவு இரயில்களின் நேரமும், சென்ட்ரலில் இருந்து புறப்படும் மும்பை விரைவு இரயிலின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் விரைவு இரயில் காலை 11.45 மணிக்கு பதிலாக இனி காலை 11.55 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் இரயில் மதியம் 2 மணிக்கு பதிலாக 2.45 மணிக்கு புறப்படும் என்றும் பாட்னாவில் இருந்து பெங்களூர் செல்லும் இரயில் சென்ட்ரலில் இருந்து 3.30 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து தர்பங்கா செல்லும் இரயில் சென்ட்ரலில் இருந்து 3.30 மணிக்கு பதிலாக 4.15 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து புறப்படும் செங்கோட்டை பொதிகை விரைவு இரயில் இரவு 8.50 மணிக்கு பதிலாக இனி 8.05 மணிக்கு புறப்படும் என்றும் இரவு 9.15 மணிக்கு பதிக்கு புறப்படும் நெல்லை விரைவு இரயில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 9.45 மணிக்கு புறப்படும் மதுரை பாண்டியன் விரைவு இரயில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்றும் எழும்பூர்-ராமேசுவரம் இரயில் 7.55 மணிக்கு பதிலாக 9.40 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து பகல் 1.05 மணிக்கு புறப்படும் ராமேசுவரம்-வாரணாசி இரயில் 1.10 மணிக்கு புறப்படும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.