வெள்ளி, 16 ஜூலை, 2010

பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர் தியரி ஹென்றி ஓய்வு




பிரான்ஸ் கால்பந்து அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், நட்சத்திர வீரர் தியரி ஹென்றி.

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் தியரி ஹென்றி. கடந்த 1998 ம் ஆண்டு உலககோப்பை மற்றும் 2000 ல் நடந்த யூரோ கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றவர். இதுவரை 123 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 51 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். கடந்த 2006 ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலககோப்பை தொடரின் பைனலுக்கு, பிரான்ஸ் அணி முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலககோப்பை தொடரின், லீக் சுற்றிலேயே வெளியேறி சொதப்பியது பிரான்ஸ் அணி. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார் ஹென்றி.

ஓய்வு: இந்நிலையில் பிரான்ஸ் அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஹென்றி. இது குறித்து அவர் கூறுகையில்,"" அணியில் நீடிக்க வேண்டும் எனில், 100 சதவீதம் உடற்தகுதி வேண்டும். இதனால் பல முறை ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு இதுவே சரியான தருணம் என கருதுகிறேன்,'' என்றார். பிரான்ஸ் அணியிலிருந்து ஓய்வு பெற்ற ஹென்றி, நியூயார்க் ரெட் புல்ஸ் அணி சார்பில் கிளப் போட்டிகளில் விளையாட உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக