வியாழன், 17 டிசம்பர், 2009

கேமர் ரோச் என்ற இளம் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளரின் பவுன்சரில் அடி வாங்கி காயமேற்பட்டு வெளியேறியது தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் முதல் முறையாக நிகழ்ந்தது இது சற்றே தனக்கு சங்கடத்தைத் தருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

பாண்டிங் களமிறங்கிய முதல் 3 பந்துகளையும் பவுன்சராக வீசி திணறைத்தார் ரோச். இதில் இரண்டாவது பந்தில் ரிக்கி பாண்டிங் முழங்கையில் அடிப்பட்டுக் கொண்டார்.

அதன் பிறகு ரோச் வீசிய மற்றொரு ஓவரில் சவாலை சந்திக்க முடிவெடுத்து 2 பவுண்டரி ஒரு ஹூக் சிக்சரையும் அடித்தார் பாண்டிங். ஆனால் அவரால் வலி பொறுக்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேற நேர்ந்தது.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய பாண்டிங், மைதானத்தை விட்டு காயம் காரணமாக வெளியேறுவது தனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய ஒன்று என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக